திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி வரும் 26ம் தேதி நடக்க உள்ளது

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி வரும் 26ம் தேதி நடக்க உள்ளது
X
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் அண்ணா பல்கலைகழகம் ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி வரும் 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நடக்க உள்ளது இதில் தென்இந்தியாவின் ஆறு மாநிலங்களை சேர்ந்த50 பல்கலைக்கழக அணிகள் விளையாட உள்ளனர்
அண்ணா பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மண்டல பல்கலைக்கழக மகளிர் கிரிக்கெட் போட்டி திருச்செங்கோட்டில் வரும் ஜனவரி 26 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நடக்க உள்ளது திருச்செங்கோடு கே எஸ் ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த போட்டியில் தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களான தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா, பாண்டிச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டிகளில் விளையாட உள்ளனர் பத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற உள்ளது .விளையாட்டுப் போட்டிகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைக்க உள்ளனர் இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகள் அகில இந்திய பல்கலைக்கழக மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.இதேபோல் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் அமைப்புகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகடமிளுடன் இணைந்து கல்வி நிறுவன வளாகத்தில் புதிய கிரிக்கெட் அகாடமி மையத்தை தொடங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமி பன்னிரண்டாவது அகாடமியாக தமிழ்நாட்டில் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் தொடங்கப்படுகிறது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும் உலகளவில் சூப்பர் கிங்ஸ்அகாடமி 35க்கும் மேற்பட்ட மையங்களை இயக்கி வருகிறது வரும் ஜனவரி 19ஆம் தேதி சூப்பர் கிங் அக்கடமி கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தில் துவக்கப்பட உள்ளது.இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே எஸ் ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன்மற்றும்நிர்வாக இயக்குனர்மோகன் ஆகியோர் கூறியதாவது உலக அளவில் பிரசித்தி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிஉருவாக்கியுள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமிஇந்தியாவில் 35 மையங்களை உருவாக்கியுள்ளது தமிழ்நாட்டில் பன்னிரண்டாவது மையமாககே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில்வரும் ஜனவரி 19ஆம் தேதி துவங்கபட உள்ளது இதற்கென இரண்டு டர்ப் பிட்ச்சுகள்,இரண்டு அஸ்ட்ரோ டார்க் பிட்ச்சுகள்,மூன்று மேட்டிங் பிச்சுகள் இரண்டு முழுமையான மைதானங்கள்மேட்ச் சிமுலேஷன் பகுதி பந்து வீசும் எந்திரங்கள் மாலை நேரம் பயிற்சி பெறுவதற்கான மின்விளக்குகள் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய முழுமையான உபகரண வசதிகள்கே எஸ் ஆர் கல்வி நிறுவனவளாகத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது கிராமப்புற பகுதிகளில் இருந்து மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அகடமி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்
Next Story