சூதாட்ட வழக்கில் 26 பேர் கைது

X
Komarapalayam King 24x7 |9 Feb 2026 6:46 PM ISTகுமாரபாளையத்தில் சூதாட்ட வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று மாலை 06:45 மணியளவில்-, கல்லங்காட்டுவலசு ராயல் கிளப்பில், 15 நபர்களும், அருவங்காடு ராயல் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் 11 நபர்களும் டோக்கன் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்தனர். நேரில் சென்ற போலீசார் இரு இடங்களிலும் 26 நபர்களை கைது செய்தனர். ஈரோடு, திருச்சி, குமாரபாளையம், பவானி, சங்ககிரி, சித்தோடு உள்ளிட்ட பல பகுதியிலிருந்து இங்கு வந்து சூதாடியுள்ளன்ர்.
Next Story
