திருவேற்காட்டில் 26 கைப்பேசிகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது

திருவேற்காட்டில் 26 கைப்பேசிகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
X
திருவேற்காட்டில் 26 கைப்பேசிகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
திருவேற்காட்டில் 26 கைப்பேசிகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது திருவேற்காட்டில் வீடு புகுந்து கைப்பேசிகள், மடிக்கணனிகளை திருடிய வழக்கில் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 26 கைப்பேசிகள், 3 மடிக்கணனிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதிகளான அயனம்பாக்கம், கோலடி பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசிகளை திருடிச் செல்வதாக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. காவல் ஆய்வாளர் ராஜகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில் கைபேசிகள் திருடுப் போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, இரு இளைஞர்கள் கைபேசிகளை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சி, கிழக்கு ஆண்டாள் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (36), கடலூர் மாவட்டம், மூங்கிலாடி கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனம் (27) ஆகியோரை போலீஸார் நேற்று (மார்ச் 30) கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் இருவரு. சென்னை, வால்டாக்ஸ் சாலையில் தங்கி இருந்து, நள்ளிரவில் வீடு புகுந்து கைப்பேசிகளை திருடியது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 26 கைப்பேசிகள், 3 மடிக்கணனிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story