தஞ்சாவூர் மாவட்டத்தில் சில இடங்களில், பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 26, 27 குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில இடங்களில், பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 26, 27 குடிநீர் விநியோகம் நிறுத்தம்
X
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,153 ஊரக குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தஞ்சாவூர் ஒன்றியம், மணக்கரம்பை மற்றும் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பிரதான குடிநீர்க்குழாயில் நீர்க்கசிவு மற்றும் பழுதடைந்த 813 மி.மீ. விட்டம் உள்ள எம்.எஸ். குழாயை சரிசெய்தல் பணிகள் நடைபெற இருப்பதால், வரும் மார்ச் 26, 27 (புதன், வியாழன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்வதால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மேற்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டக்கோட்டம். தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story