வாராந்திர குறைதீர் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு 4,51,000 மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர்.
வாராந்திர குறைதீர் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு 4,51,000 மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர். வாரந்தோறும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர். இதில் உடனடியாக தீர்வு காணப்படும் மனுக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒரு சில மனுக்கள் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும். குறைதீர்க் கூட்டத்தின் நிறைவில் 26 பயனாளிகளுக்கு ரூபாய் 4,51,180 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






