செந்துறையில் ரூ2.61 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் கட்டுமான பணி பூமி பூஜை

X
அரியலூர் ஜூன்.17- அரியலூர் மாவட்டம் செந்துறையில் கடந்த சுமார் 25 ஆண்டு காலமாக வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது செந்துறையில் உடையார்பாளையம் சாலையில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ரூ2.61 கோடி மதிப்பீட்டில் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை முழு கூடுதல் பொறுப்பு பெரம்பலூர் - அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் மாவட்ட அலுவலர் வினோத் தலைமையில் செந்துறை நிலைய அலுவலர் பூபதி முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக பொறியாளர்கள், தீயணைப்பு நிலைய வீரர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

