காங்கேயம் காளை சிலை அமைக்க வலியுறுத்தி 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு
Kangeyam King 24x7 |19 Nov 2024 3:54 AM GMT
காங்கேயம் காளை சிலை அமைக்க வலியுறுத்தி 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார் நேரில் சென்று அழைப்பிதழ்களை வழங்கி கலந்து கொள்ள வலியுறுத்தி வருகின்றார்
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும் 27ம் தேதி புதன்கிழமை காங்கேயம் காளை சிலை அமைக்க உண்ணாவிரத போராட்டத்தை காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற உள்ளது.இதற்க்கு அனைத்து கட்சி ஒன்றிய நகர நிர்வாகிகளை சந்தித்து அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். மேலும் காங்கேயம் காளை சிலை அமைக்க கடந்த 20 வருடங்களாக பல்வேறு முறை வட்டாச்சியர்,கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் அமைச்சர்,முதல் அமைச்சர்,மத்திய அமைச்சர்கள் என பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இல்லை என்கின்றனர்.மேலும் கடந்த 06.11.2020 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் காங்கேயம் காளை சிலை அமைக்க கோரி மனு வழங்கியதாகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காங்கேயம் காளை சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பின்னர் காங்கேயம் காளை சிலை அமைக்க காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் 28.02.2022 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரால் மாவட்ட ஆட்சித் தலைவர் திருப்பூர் அவர்களுக்கு அனுமதி கேட்டு 02.03.2022 கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரால் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு 06.09.2022 மனு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இந்த காங்கேயம் காளை சிலையானது காங்கேயம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்படும் என உறுதியளித்து பின்னர் ஆட்சி அமைத்த பின் அதை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 20 வருடங்களாக இந்த காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சேனாபதி அவர்களை நேற்று சந்தித்த ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ் குமார் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே.ஜவஹர், திமுக நிர்வாகி வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story