மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தர்மபுரி 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள் தனூர் மாத வழிபாடு

X
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பர்மாச்சாரியா சுவாமிகள் தனுர் மாத வழிபாடு மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் தீர்த்தனகிரி கொழுந்தீஸ்வரர் திருச்சோபுரம் திருச்சோ புரநாதர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று பின்னர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் திருத்தலத்திற்கு வருகை புரிந்தார். திருக்கோயில் சார்பாக அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு மாலை மற்றும் பட்டு சாத்தி வரவேற்றனர் . ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பாடலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை செய்து அருள் பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கினார்கள். திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தர்மபுரம் ஆதீனம் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
Next Story

