போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 27 வாகனங்கள் பறிமுதல்
Nagercoil King 24x7 |2 Jan 2025 3:04 PM GMT
நாகர்கோவிலில்
கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் Iஉத்தரவின் பேரில் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் இன்று ராமன்புதூர் பள்ளி பகுதி அருகே, நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் ஆகிய விதிமுறைகளில் ஈடுபட்ட சுமார் 27 இளைஞர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து ரூபாய் 1 லட்சத்து 36 ஆmாம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அபராதம் செலுத்திய பின் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களுக்கு முறையான பதிவு எண் பொருத்தி அனுப்பப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
Next Story