உதகை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு பகுதியில் கழிவு நீர்கள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ...
உதகை நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு பகுதியில் கழிவு நீர்கள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ... நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 36 வார்டுகளிலும் சேதாரமாகவும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை நகராட்சிக்குட்பட்ட 27 வது வார்டு பகுதியான கஸ்தூரிபாய் காலனி, இந்திரா காலனி, குருசடி காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய்கள் துர்வர்ப்படாததால் கழிவு நீர்கள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அவல நிலை ஏற்பட்ட வருவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே செல்லும் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் குப்பைகள் கொட்டப்படும் கழிவு நீர்கள் செல்வதால் அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மன்ற உறுப்பினர் இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story




