பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு27 ஆண்டுகள் சிறை தண்டனை

X
பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு27 ஆண்டுகள் சிறை தண்டனை 17 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த 17 வயது பள்ளி மாணவியை அதே கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான நல்லதுரை த/பெ இளங்கோவன் என்பவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடிஐயில் பயின்றபோது பேருந்தில் வரும்போது காதலித்து உள்ளார். திருமணம் செய்து கொள்ள தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி அதற்கு மறுக்கவே நல்லதுரை அவரது கையில் சிகரெட்டால் வரிசையாக சுட்டுக் கொண்டதாகவும் இடது கையில் பிளேடால் கீரி காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 18/4/2016-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு நல்லதுரையின் நண்பர் முத்துகுமார் த/பெ முத்துசாமி என்பவர் உதவியுடன் நல்லதுரை கடத்தி சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வாடகை வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நல்லதுரை பலமுறை உடலுறவு கொண்டுள்ளார் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா மருவத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்னர் நல்லதுரை ஜாமினில் வெளிவந்து வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் இதுநாள் வரை நடந்து வந்தது .அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி இந்திராணி பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோரின் பாதுகாவலிலிருந்து கடத்திய குற்றத்திற்காக இ த ச பிரிவு 363 இன் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் பிரிவு 5 உடன் இணைந்த 6 ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார் இந்த வழக்கில் மற்றொரு எதிரியான முத்துக்குமார் வழக்கிற்கு ஆஜராகாமல் தப்பி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். தீர்ப்பினை தொடர்ந்து நல்ல துரையை போலீசார் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

