நாகை சின்மயா வித்யாலயா பள்ளி 27 -வது ஆண்டு விழா

பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி
நாகை சின்மயா வித்யாலயா பள்ளியின் 27- வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவினை, உச்சநீதிமன்ற தீர்ப்பாயங்களின் வழக்கறிஞர் டாக்டர் சத்தியகுமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வியத்தகு இந்தியா என்ற தலைப்பில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மழலையரின் கலை நிகழ்ச்சிகள் களை கட்டின. நிகழ்ச்சியில், இந்திய கலாச்சாரத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி பாடல்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளும், மழலைகளும் வளைந்து, நெளிந்து உற்சாகத்துடன் கலர்ஃபுல் நடனம் ஆடி அசத்தினர். குறிப்பாக வண்ணமயமான உடைகள் அணிந்து குஜராத்தி மற்றும் பஞ்சாபி பாடலுக்கு ஃவைபாகி ஆட்டம் போட்ட மழலையர்களின் நடனம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Next Story