பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது ஓபிஎஸ்
வெற்றிக்கான பதிலை கூற முடியாது அது ரகசியம் அல்ல - பரம இரகசியம் என்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேரள மாநிலம் மூணாறில் நேற்று சுற்றுலா பேருந்து விபத்திற்குள்ளாகி காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்களை இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ். டெல்லியில் இன்று பாஜக முதல்வர் பதவியேற்பது குறித்த கேள்விக்கு? மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது எனக் கூறினார் தொடர்ந்து ஜெயலலிதா ஓபிஎஸ் குறித்து தன்னிடம் அதிருப்தி தெரிவித்திருந்தார், ஓபிஎஸ் பதவிக்காக எந்த இலக்கும் செல்லக்கூடியவர் என ஆர்.பி.உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு ஓ பன்னீர்செல்வம் பதில் தர மறுத்த நிலையில் , அருகே இருந்த ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் அதற்கு ஜெயலலிதா பேசினால் நேரடியாக இவரிடம் தான் பேசினார்கள், ஆர்பி உதயகுமாரிடம் அவர் பேசவில்லை என பதில் கூறினார். தொடர்ந்து வெற்றிக்கான ரகசியம் உள்ளது என்று நீங்கள் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அது இரகசியம் என்றும் அதிமுகவில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் நீங்கள் பேசுவது தான் ரகசியமா அல்லது வேறு முக்கியத்துவம் ஆனது இருக்கிறதா என மீண்டும் கேட்டதற்கு தற்போது கூற முடியாது அது பரம இரகசியம் என ஏற்கனவே தெரிவித்திருப்பதாக கூறினார்
Next Story



