அண்ணாமலை 27 ம் தேதி கன்னியாகுமரி வருகை 

அண்ணாமலை 27 ம் தேதி கன்னியாகுமரி வருகை 
X
பசு பாதுகாப்பு யாத்திரை
அகில பாரத கோ சேவா பவுண்டேஷன் சார்பில் பசுவை காப்பதன் மூலம் பூமியை காக்கலாம் என்பதை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பசு பாதுகாப்பு மகா யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் இருந்து இந்த பசு பாதுகாப்பு யாத்திரை தொடங்கியது. அகில பாரத கோ சேவை பவுண்டேஷன் நிர்வாகி ஸ்ரீ பாலகிருஷ்ண குருசாமி தலைமையில்  புறப்பட்ட இந்த யாத்திரை டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்கள் வழியாக வருகிற 27ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறது.       இந்த யாத்திரை நிறைவு விழா வருகின்ற 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கன்னியாகுமாரி விவேகானந்தா கேந்திர வளகத்தில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாத்திரை நிறைவு செய்து வைக்கிறார்.
Next Story