தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஏப்.27ல் வீரர்கள் தேர்வு!

X
தூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 2025, ஜூலை 2025 மாதங்களில் மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சான் சான் கிரிக்கெட்அகாடமி பயிற்சி மையத்தில் நடக்கிறது. 14 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 1.9.2011 அன்றோ அதற்கு பின்னரோ, 16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 1.9.2009 அன்றோ, அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கிரிக்கெட் ஒயிட்ஸ், விளையாட்டு உபகரணங்கள், ஆதார் நகல் பி.டி.எப், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு போட்டோ பி.டி.எப், பிறப்பு சான்றிதழ் பி.டி.எப் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செயலாளர் கிறிஸ்பின் (80156 21154), மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன் (87540 04377), மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் (99448 33333) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

