போக்சோ வழக்கில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை

X
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(29) என்பவரை ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் சரக காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், நீதிமன்ற முதல்நிலை காவலர் மாரியம்மாள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி சீரிய முயற்சியால் (16.05.2025) இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி அஜித்குமார் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 25 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

