இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 27 வது கிளை மாநாடு

X
மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 27-ஆவது கிளை மாநாடு இன்று நடைபெற்றது. சிபிஐ முன்னாள் கிளைச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மாலா பாண்டியன், மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா். தியாகிகள் நினைவு சின்னத்தை மூத்த உறுப்பினா் இளங்கோவன் திறந்து வைத்தாா். மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, மகாதேவப்பட்டணம் ஊராட்சியில் உள்ள அனைத்து நீா் நிலைகளிலும் நிரப்பி, நீர் ஆதாரத்தை காத்திட வேண்டும். கல்லரை தெரு, ஐயா் தெரு மயானச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

