இஸ்ரேல் அரசைக் கண்டித்து  ஜூன்.27 இல், தஞ்சாவூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசைக் கண்டித்து  ஜூன்.27 இல், தஞ்சாவூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
X
கண்டன ஆர்ப்பாட்டம்
அப்பாவி பாலஸ்தீனக் குழந்தைகள், பொதுமக்கள் மீது அடாவடியாக தாக்குதல் நடத்தி, உயிர்ப் பலி ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஜூன் 27ஆம் தேதி சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டம் சரோஜ் நினைவரங்கில், மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல்நசீர் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், 'பாலஸ்தீனம், காசா பகுதியில் 65,000க்கும் மேற்பட்ட குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இஸ்ரேல் அரசின் தாக்குதலால் இறந்துள்ளதையும், காயமடைந்த மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவு, கிடைக்காமல் அல்லல்படுவதையும்' விரிவாக எடுத்துரைத்தார்.  இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், மனித நேய ஜனநாயகக் கட்சி, மாவட்ட அவைத்தலைவர் அப்துல்லா, சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் என்.குருசாமி, எம்.கோஸ்கனி, வர்ஷத் முஹமது, ராஜா, ஷபீக்பாபு, சாகுல்ஹமீது, ஹஜ்ரத் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 'காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் என உலகம் தழுவிய கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல், ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. எனவே உடனே போரை நிறுத்த வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு துணை போகக்கூடாது.  இந்திய அரசாங்கம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜூன்.27 வெள்ளிக்கிழமை அன்று, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், இதில் இதர ஜனநாயக, சமூக நல இயக்கங்களையும் இணைத்துக் கொள்வது" எனவும் முடிவெடுக்கப்பட்டது.
Next Story