அதிக மதிப்பெண் எடுத்த 27 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

X
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க புரவலர் திருவருட் பேரவை இணைச் செயலாளர் திபூர்சியஸ் தலைமையில் புகையிலைப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 27 மாணவ மாணவிகளுக்கு கேடையமும் சான்றிதழும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி வழங்கினார். மேலும் லயன்ஸ் மாவட்ட ஆளுனரின் கனவு திட்டமான வாசிப்பை நேசிப்போம் என்ற திட்டத்தின் மூலம் 200 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்ஙப்பட்டது. இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர் ஸ்ரீகாந்த், காஸ்மாக் லைன்ஸ் என்ற தலைவர் சதீஷ்குமார், செயலாளர் தனராஜ் உட்பட லைன்ஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story

