இந்து முன்னேற்ற கழகம் சார்பில் 27 விநாயகர் சிலை பிரதிஷ்டை

X
பல்லடத்தில் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதுகுறித்து மாநில செயலாளர் டாக்டர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் அறிவுரையின்படி பல்லடம் பகுதியில் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் பல்லடம், வடுகபாளையம், மாதப்பூர், கள்ளகிணறு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது என்றார்.
Next Story

