சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா
X
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் நாளை காலை 10.30 மணி அளவில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 650 எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது நட்சத்திரத்திற்குரிய நடலாம் இதுகுறித்து தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவிக்கையில் 27 நட்சத்திர மரங்கள் நடும் விழா என்பது, ஒவ்வொருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கும் உரிய மரக்கன்றை நடுவதன் மூலம் வாழ்வில் நல்ல பலன்களைப் பெற உதவும் ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகும். இந்த மரங்களை உங்கள் நட்சத்திர தினத்தில், சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடுவது சிறந்தது என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார்
Next Story