கோவை சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 27-வது ஆண்டு பிரதிஷ்டை–அசன பண்டிகை !

சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் அசன விருந்து நிகழ்ச்சி.
கோவை–திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் 27-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. அதன் நிறைவாக நேற்று அசன பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவை–சேலம் மறைமாவட்ட பேராயர் லிவிங்ஸ்டன் ஜேக்கப் விழாவை தொடங்கி வைத்தார். 25 ஆயிரம் பேருக்கு சாதம், ஆட்டிறைச்சி குழம்பு உள்ளிட்ட விருந்து வழங்கப்பட்டது. இதற்காக 6 டன் அரிசி, 3 டன் ஆட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பணியாற்றினர். ஆலய தலைவர் பாதிரியார் ராஜேந்திர குமார், செயலாளர் ஜெ.பி.ஜேக்கப், பொருளாளர் பரமானந்தம், ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story