திருச்செங்கோடு நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினமான நவம்பர் 27ஆம் தேதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

திருச்செங்கோடு நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினமான நவம்பர் 27ஆம் தேதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவித்தார்
நேற்று நவம்பர் 27ம் தேதி தமிழ்நாடு துணை துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகர திமுக சார்பில்  27ம் தேதி அரசு திருச்செங்கோடு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக மற்றும் மேற்கு நகர திமுக சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி கலந்து கொண்டு 27ம் தேதிஅரசு மருத்துவ மனையில்  பிறந்த நான்கு ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் என ஏழு குழந்தைகளுக்கு    தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக உதயநிதியின் 49 வது பிறந்தநாள் முன்னிட்டு 49 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திமுக கிழக்கு நகர  செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் திமுக மேற்கு நகர செயலாளர்நகர் மன்ற முன்னாள் தலைவர் நடேசன் திருச்செங்கோடு மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர திமுக இளைஞர் அணி செயலாளர் செங்கோட்டுவேல், மாணவர் அணி செயலாளர் தியானேஸ்வரன் நகர துணை செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகர துணை செயலாளர் ராஜேந்திரன், நகர அவை தலைவர் மாதேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சினேகா ஹரிஹரன்,அடுப்பு ரமேஷ் புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல் சண்முக வடிவு, செல்லம்மாள் தேவராஜன், ரமேஷ் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story