அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுடன் 27, 28-ல் இபிஎஸ் ஆலோசனை

X
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தல்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜூன் 27-ம் தேதி காலை 10 மணிக்கு ஐடி விங் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 28-ம் தேதி ஐடி விங் மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (ஐடி விங்) செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
Next Story

