திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி வரும் ஜனவரி 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி சிறப்பு முகாம்கள்
Tiruchengode King 24x7 |26 Dec 2025 9:10 PM ISTதிருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதற்குப் பிறகு ந 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி வரும் ஜனவரி 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி ஆகியவற்றில் நடக்க உள்ள சிறப்பு முகாம்கள் குறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருக்கு எடுத்துக் கூறும் விதமாகஆலோசனைக் கூட்டம்
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2,32,858 வாக்காளர்கள் இருந்த நிலையில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் பணி நடந்து முடிந்த பிறகு 2 லட்சத்து 947 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளனர். ஏற்கனவே 261 பாகங்கள் இருந்தமாரி 289 பாகங்களாக திருத்தப்பட்டுள்ளது இது தவிர ஏற்கனவே இருந்த உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட மூன்று பேருடன் மேலும் 17 வாக்காளர்பதிவு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.இவர்களுக்கு என தனித்தனி பாகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த பாகங்களுக்குரிய வாக்காளர்கள் விடுபட்டு போனவர்கள், 01.01. 26 தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடையும் இளைஞர்கள் புதிய வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், திருத்தம் வேண்டுபவர்கள் முகவரி மாற்றம் வேண்டுபவர்கள் என படிவம் ஆறு ஏழு எட்டு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் நேரில் விண்ணப்பிக்கும் நபர்களது படிவங்களையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்க்களது படிவங்களையும் பிஎல்ஓக்கள் விசாரணை செய்து வாக்காளர் பட்டியில் சேர்க்க பரிந்துரை செய்வார்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் குறித்த விபரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின் 19.02.2026 இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். விடுபட்ட வாக்காளர்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்கண்டறிந்து படிவம் ஆறு ஏழு எட்டு ஆகியவற்றை கொடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் நீக்கல் திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும் என அனைவருக்கும் வருவாய் கோட்டாட்சியர் லெனின் விளக்கமாக எடுத்துக் கூறினார்.மேலும் விடுபட்டுப் போன வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திதங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் வரும் 01.01.2026அன்று 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு புதிய வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்என வருவாய் கோட்டாட்சியரும்திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான லெனின் தெரிவித்தார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்,வருவாய் கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் சிவகுமார்மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக,திமுகஉள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story


