கரூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 270-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

கரூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 270-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
கரூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 270-வது பிறந்தநாள் கொண்டாட்டம். இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவர் தீரன் சின்னமலை. இவரது 270 வது பிறந்தநாளை இன்று தமிழகம் முழுவதும் உள்ள கவுண்டர் சமுதாயத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு,தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆனந்தகுமார் தலைமையில் மலர்மாலை அறிவித்தும், மலர்கள் தூவியும் புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் நல்லசாமி, கவுண்டர் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் கௌதம், கொங்கு நண்பர்கள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சம்பத் சாமியப்பன், செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பி வாழ்த்தினர்.
Next Story