கரூர் மாவட்டத்தில், 273.40மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில், 273.40மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில், 273.40மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்ச பட்டியில் 97.00-மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போல க. பரமத்தியில் 6.60 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 4.00 மில்லி மீட்டர், கரூரில் 9.80 மி.மீ, குளித்தலையில் 26.00 மில்லி மீட்டர், தோகை மலையில் 11.00-மி.மீ, கிருஷ்ணராயபுரத்தில் 38.00 மில்லி மீட்டர், மாயனூரில் 47.00 மில்லி மீட்டர், கடவூரில் 4.00-மி. மீ,பால விடுதியில் 18.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 12.00-மில்லி மீட்டர் என மொத்தம் 273.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனுடைய சராசரி அளவு 22.78 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story