ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாாட்டம். 277 பேர் கைது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 277 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 277 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சென்றபோதே போலீஸார் வழிமறித்து கைது செய்து பேருந்துகளில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இதில் மாவட்ட அவைத் தலைவர் அ.கோவிந்தராஜன், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு, நகரசெயலாளர் அசோக்குமார், ஆரணி ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்கறிஞர் க.சங்கர், ஜெயபிரகாசம், திருமால், போளூர் பகுதி ஒன்றியசெயலாளர்கள் விமல், ஸ்ரீதர், ராகவன், ஆரணி நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், குமரன், சுதாகுமார், நிர்வாகி மில்சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, ராஜாங்கம், எஸ்.ஐக்கள் சுந்தரேசன், அருண், ஷாபுதீன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 277 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.
Next Story