கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!

X
கோவையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், விற்பனைக்கு வைத்திருந்த 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்காநல்லூர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில், நியமன அலுவலர் அனுராதா தலைமையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 37 இ-காமர்ஸ் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டது. காலாவதியான உணவுப் பொருட்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பல்வேறு கடைகளிலும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சோதனைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

