பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்ட முதியவருக்கு 28 மாத சிறை தண்டனை

பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்ட முதியவருக்கு 28 மாத சிறை தண்டனை
விருத்தாசலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு
பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்ட முதியவருக்கு 28 மாத சிறை தண்டனை விதித்து, விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருத்தாசலம் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் தர்மலிங்கம். இவர், கடந்த 21.10.2009 அன்று விருத்தாசலம் கடைவீதி நான்கு வழி சாலை சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன்பேட்டை, விருத்தாம்பிகை நகரைச் சேர்ந்த குப்புசாமி(76), என்பவர் அவரிடம் தகராறு செய்து, பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து தர்மலிங்கம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி, குப்புசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குப்புசாமிக்கு 28 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.
Next Story