இசை மூர்த்தி தியாகராஜசுவாமி 28ஆம் ஆண்டு சிறப்பு இசை முன்னாள் அமைச்சர் வீரமணி பங்கேற்பு
Tirupathur King 24x7 |1 Jan 2025 2:23 AM GMT
சுதந்திர போராட்ட தியாகி இசை மூர்த்தி தியாகராஜசுவாமி 28ஆம் ஆண்டு சிறப்பு இசை விழா நடைப்பெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் இயல், இசை, நாடகம், காலத்தால் அழியாதது, இசை கலைஞர்களின் கோரிக்கைகள் எடப்பாடியார் ஆட்சியில் விரைவில் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உறுதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகி இசை மூர்த்தி தியாகராஜசுவாமி 28ஆம் ஆண்டு சிறப்பு இசை விழா நடைப்பெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே. சி. வீரமணி சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உலகத்தில் இயல், இசை, நாடகம் காலத்தில் அழியாதது எனவும் இசை கலைஞர்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் ஓய்வு ஊதியம் 3000மாக உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகியும் இசை கலைஞர்களுக்கு எந்தவொரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, மேலும் காஞ்சிபுரத்தில் கலைபண்பாட்டு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வெகுத்தொலைவில் சென்று வரும் நிலை உள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தினை மையமாக கொண்டு கலைபண்பாட்டு துறை அலுவலகம் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விரைவில் எடப்பாடியார் ஆட்சியில் இசை கலைஞர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அப்போது திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி. டி. குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர். திருப்பதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல தலைவர் டாக்டர். நாகேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story