பிப்ரவரி 28 திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்ரவரி 28 திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X
பிப்ரவரி 28 திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28-ல்) குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதால் சங்க நிர் வாகிகள் உள்ளிட்ட அனைவ ரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டார். மாதந்தோறும் விவசாய சாகு படி மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் மற்றும் குறைபா டுகள் தொடர்பாக தெரிவிக் கும் வகையில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ் மாதக் குறைதீர் கூட்lடம் வரும் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கத் தில் நடைபெற உள்ளது, இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறி யியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை சார் அதிகாரிகளும் பங்கேற்க இருக்கின்றனர். எனவே, மாவட்டத்தில் விவ சாய சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னைகள் மற்றும் குறை களை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ அளித்தால் உடனடி தீர்வு காணப்படும். இதில், விவசாயிகள் அனைவ ரும் தவறாமல் பங்கேற்று பயன் பெற வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.
Next Story