இந்திய மாணவர் சங்கத்தின் 28 -வது மாவட்ட மாநாடு

X
நாகையை அடுத்த பாப்பாகோவில் எஸ்.எம்.மஹாலில், இந்திய மாணவர் சங்கத்தின் 28 - வது நாகை மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது, மாநாட்டின் முதன் நிகழ்வாக, மாநாட்டு பேரணியை நாகை புத்தூர் அண்ணா சிலையிலிருந்து, கீழ்வேளூர் எம்எல்ஏ. நாகை மாலி தொடங்கி வைத்தார், அமைப்பினுடைய ஸ்தாபன கொடியை மாவட்ட தலைவர் எம்.ஜோதிபாசு ஏற்றி வைத்தார், மாநில இணை செயலாளர் ஜி.கே.மோகன், தொடக்க உரையாற்றினார், மாநிலத் துணைத் தலைவர் பா.ஆனந்த் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரையாற்றினார், மாவட்டச் செயலாளராக எம்.முகேஷ் கண்ணன், மாவட்ட தலைவராக எம்.முகேஷ் ராஜன், மாவட்டச் செயலாளராக எம்.முகேஷ் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர்களாக சிவச்சந்திரன், தீனா, மாவட்ட துணைச் செயலாளர்களாக சதீஷ்குமார், நிகிதா ஆகியோரும், 23 பேர் கொண்ட மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
Next Story

