மேல பஞ்சபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் கைது.28 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

மேல பஞ்சபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் கைது.28 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
மேல பஞ்சபட்டியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் கைது.28 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம் , லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல பஞ்சப்பட்டி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து கிடைத்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா ஆகஸ்ட் 4ம் தேதி மேலபஞ்சப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார், அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி மலர் வயது 43 என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக மது விற்பனையில் ஈடுபட்ட மலரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 28 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மலர் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.
Next Story