அக்.. 28ல் சோலார் மேளா விடுமுறையிலும் பிரச்சாரம் செய்த மின்வாரியத்தினர்

X
Komarapalayam King 24x7 |26 Oct 2025 9:01 PM ISTஅக். 28ல் சோலார் மேளா. நடைபெறுவதையொட்டி குமாரபாளையம் மின்வாரியத்தினர் விடுமுறையிலும் பிரச்சாரம் செய்தனர்.
அக். 28ல் பள்ளிபாளையத்தில் உள்ள ஆவாரங்காடு, நகராட்சி சமுதாய கூடத்தில் சோலார் மேளா நடைபெறுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலை வகிக்க உள்ளார். கரூர் மண்டலம் தலியிமை பொறியாளர் அசோக்குமார், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம், பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் உள்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். சோலார் அவசியம் குறித்தும், மின் கடன சேமிப்பு குறித்தும் விளக்கமளிக்க உள்ளனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற, குமாரபாளையம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும், இந்த சோலார் மேளா குறித்து மின்வாரிய அதிகாரிகள் தீவிர பிரச்சாரம் செய்தனர். வீடுகள், கடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.
Next Story
