அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது. ரூபாய் 2,800 மதிப்புள்ள 280 கிராம் கஞ்சா பறிமுதல்.

அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது. ரூபாய் 2,800 மதிப்புள்ள 280 கிராம் கஞ்சா பறிமுதல்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது. ரூபாய் 2,800 மதிப்புள்ள 280 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட,தண்ணீர் பந்தல் பிரிவு அருகே பெண் காவல் உதவி ஆய்வாளர் ரம்யா செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் சோதனை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, விசுவநாதபுரி, மேல தெருவை சேர்ந்த பாட்ஷா என்கிற ராமச்சந்திரன் என்பவரை இடைமறித்து, அவரிடம் இருந்து ரூபாய் 800 மதிப்புள்ள 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆனூர் பெட்ரோல் பங்க் அருகே சோதனை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அழகுராம், அரவக்குறிச்சி தாலுகா, தும்பிவாடி அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்கிற நெப்போலியன் வயது 26 என்பவரை இடைமறித்து சோதனை இட்டபோது அவரிடம் ரூ 1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, காவல் உதவி ஆய்வாளர் மகாமுனி குளத்தூர் பஸ் ஸ்டாப் அருகே சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்கிற மைசூர் ராமன் வயது 55 என்பவரிடமிருந்தும் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.
Next Story