ஓலப்பாளையத்தில் 281 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்

ஓலப்பாளையத்தில் 281 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்
X
வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில் 281 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கினார்
வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தாராபுரம் சப்- கலெக்டர் பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். வருவாய்த்துறை சார்பில் இந்த பட்டாக்கள் வழங்கப்பட்டன. பச்சாபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 281 பயனாளிகளுக்கு பட்டாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். காங்கேயம் தாசில்தார் மோகனன். திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே. ஆர். முத்துகுமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன் நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், பி.ஏ.பி பாசன சபை தலைவர் தங்கமுத்து, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் ப. ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story