நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் 28.11.2025 வரை வெள்ளிக்கிழமை உதவி மையங்கள் செயல்படும்- மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 22.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சிறப்பு முகாமின் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 1629 உதவி மையங்களிலிருந்து 2,31,671 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் உதவி ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், மாவட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என சுமார் 3500 நபர்கள் நிமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள், 8 வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருகின்ற 28.11.2025 வரை அனைத்து வேலை நாட்களிலும் / நேரங்களிலும் மேற்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையங்கள் செயல்படும். இந்த உதவி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் வாக்காளர்கள் எவ்வாறு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நிரப்புவது என்பது குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி, படிவத்தை நிரப்பிட உதவி செய்வார்கள். எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 2026 முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம், இந்திய தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (ஊடகம்) அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து பின்பற்ற வேண்டிய ஊடக வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஊடக பொறுப்பு அலுவலர் /செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.வ.சந்தியா, வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.).சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள்வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், தேர்தல் தனிவட்டாட்சியர் .அ.செல்வராஜ் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story