சின்னசேலம் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.85 லட்சம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பகண்டை கூட்ரோடு மற்றும் சின்னசேலம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 2.85 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அலுவலர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 10:15 மணியளவில் பகண்டை கூட்ரோடு அடுத்த சாங்கியம் கிராம பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வாணாபுரம் அடுத்த கே.சி.,தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், 33; என்பவர் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 500 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை குழுவினர், வாணாபுரம் தேர்தல் தாசில்தார் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.