அரசால் தடை செய்யப்பட்ட 2.870 கிலோகிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து

X
அரசால் தடை செய்யப்பட்ட 2.870 கிலோகிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து இன்று 19.05.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் ரகுராமன் 43/25 த/பெ ராமகிருஷ்ணன், கபிலன் தெரு, சமத்துவபுரம், எளம்பலூர், பெரம்பலூர் மாவட்டம் என்பவர் எளம்பலூரில் உள்ள அரசு பள்ளி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் (95 பாக்கெட் - 1.900 kg) 2.விமல் பாக்கு (20 பாக்கெட் - 0.300 கிராம்) 3. A1 பான்மசாலா (15 பாக்கெட்- 0.210 கிராம்) 4.கூல் லீப் (20 பாக்கெட் - 0.240 கிராம்) 5. டைரக்டர் (14 பாக்கெட் - 0.220 கிராம்) என மொத்தம் 2.870 kg எடையுள்ள 6850 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

