கோவை: போலி ஆவணங்கள் தயாரித்து தொழில் அதிபரிடம் ரூ.2.88 கோடி மோசடி – தாய், 4 மகன்கள் மீது வழக்கு

X
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜிதேந்திரகுமார் பப்னா அளித்த புகாரின் பேரில், சுப்புலட்சுமி மற்றும் அவருடைய நான்கு மகன்கள் — விசுவேசுவரன், பாலசுந்தரம், ஜெயகுமார், அசோக்குமார் — மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜிதேந்திரகுமார் பப்னா, சுப்புலட்சுமியுடன் 9 மாடிகள் கொண்ட 18 வீடுகள் கட்டும் ஒப்பந்தம் செய்திருந்தார். ஒப்பந்தப்படி சுப்புலட்சுமிக்கு 10 வீடுகள், பப்னாவுக்கு 8 வீடுகள் கிடைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பின்னர் சுப்புலட்சுமி மற்றும் அவரது மகன்கள், தொழில் அதிபரின் கையொப்பத்தையும் நிறுவன ஆவணங்களையும் போலியாக தயாரித்து, வீடுகளை விற்று ரூ.2.88 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகர குற்றப்பிரிவு போலீசார் மோசடி மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

