நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்பரர் வ.இளம்பரிதி எம்.கார்த்திக், ரமேஷ், பிரபாகரன், கலைவாணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைகள் தோறும், புதிய இளைஞர் அணி சேர்க்கை இல்லம்தோறும் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்,

வரும் 10 ஆம் தேதி நாமக்கல் நளா ஹோட்டலில் காலை 9 மணிக்கு ஒன்றிய நகர பேரூர்களில் இளைஞர் அணி உறுப்பினர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் நேர்காணல் நடத்த உள்ளார்கள். எனவே ஒன்றிய, பேரூர்களில் இளைஞர் அணியில் பணியாற்ற விண்ணப்பித்த அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,

மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கான அழைப்பிதழாக நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக சுமார் 15,000 இளைஞர்கள் பங்கு பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி நன்றி கூறினார்.

Tags

Next Story