நாமகிரிப்பேட்டையில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா, பகுதி நேர நியாய விலை கடை எம்பி திறந்து வைத்தார்..

X

நாமகிரிப்பேட்டையில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா, பகுதி நேர நியாய விலை கடை எம்பி திறந்து வைத்தார்..
ராசிபுரம் அருகே ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் பகுதி நேர நியாய விலை கடையை MP. ராஜேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் மாநிலங்களவை உறுப்பினர் KRN. ராஜேஷ் குமார் கலந்து கொண்டு ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் தண்ணீர் பந்தல் காடு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நியாய விலை கடைக்கு, பகுதி நேர நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டு வரபட்ட சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் கேட்ட போது,அதற்கு பதில் கூறிய பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர்.மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில் கும்பக்கொட்டாய் எங்கள் பகுதியில் எந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தமால் செல்வதாக கூறி MP ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை வைத்த நிலையில் அதிகாரிகளிடம் உடனடியாக பேசி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவரும் பேரூர் கழக செயலாளருமான அன்பழகன், பேரூர் இளைஞர் அணி சுரேஷ், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story