ராணுவ வீரர் வீட்டில் 29 பவுன் தங்க நகை கொள்ளை

X
திண்டுக்கல் தருமத்துபட்டியை அடுத்த சுரக்காய்பட்டியை சேர்ந்த பாண்டி(35) மத்திய பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா சுரக்காபட்டியில் வசித்து வருகிறார். உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டின் சாவியை வீட்டின் நுழைவாயில் பகுதியில் மறைவான இடத்தில் வைத்திருந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கன்னிவாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

