கூடை பந்தாட்ட போட்டி 29ஆம் தேதி தொடங்குகிறது

கூடை பந்தாட்ட போட்டி 29ஆம் தேதி தொடங்குகிறது
X
தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கூடை பந்தாட்ட போட்டி 29ஆம் தேதி தொடங்குகிறது
. தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம் செயலாளர் சாகுல் சீராசுதீன் ,பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கை சந்தித்தனர். அப்போது தூத்துக்குடி துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். தூத்துக்குடியில் 15வது ஆண்டாக இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூத்துகுடி ஜிம்கானா கிளப்பில் நடைபெற உள்ள இந்த போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் ரொம்ப பரிசுகளும் வழங்கப்படும். போட்டி முடிவில் தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த் குமார் புரோகித், ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்க உள்ளனர். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story