பெண்ணிடம் ஆறுதலாக பேசி 29 லட்சம் பணம் மற்றும் 23 கிராம் நகைகள் மோசடி

பெண்ணிடம் ஆறுதலாக பேசி 29 லட்சம் பணம் மற்றும் 23 கிராம் நகைகள் மோசடி
மோசடிக்கு உள்ளான பெண் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் மோசடி செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மதுரவாயல் பகுதியில் விவாகரத்து ஆன பெண்ணிடம் ஆறுதலாக பேசி 29 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 23 கிராம் நகைகளை பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் போரூர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு (62). இவரது மகள் சுருதி வர்ஷினி இதய நோய் காரணமாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 16ஆம் தேதி சுருதி வர்ஷினி உயிரிழந்தார். பின்னர் அவரது வங்கி கணக்குகளை சோதித்துப் பார்த்தபோது கார்த்திக் என்பவருக்கு பல தவணைகளாக 29 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சந்தேகமடைந்த திருநாவுக்கரசு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் (34) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இல் உள்ள மருத்துவமனைக்கு சுருதி வர்ஷினியை காரில் அழைத்து செல்லும்போது ஓட்டுநர் கார்த்திக் அவருடன் பழகியுள்ளார். விவாகரத்து பெற்று இதய நோயுடன் இருந்த சுருதிஹாசனிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி நட்பாகி உள்ளார். பின்னர் பல்வேறு தவணைகளில் பணத்தைப் பெற்று மொத்தம் 29 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி 23 கிராம் தங்க நகையையும் சுருதி வர்ஷினி இடமிருந்து வாங்கியுள்ளார். அவர் மோசடி செய்த சம்பவம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story