வரும் 29, 30, 31 தேதிகளில் குடிநீர் வரி செலுத்தலாம்

X

வரும் 29, 30, 31 தேதிகளில் குடிநீர் வரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29, 30, 31 தேதிகளில் குடிநீர் வரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட்களான மார்ச் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை), 31 (ரம்ஜான்-திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் இயங்கும். மேலும், நுகர்வோர்கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி இணையவழியிலும் செலுத்தலாம்.
Next Story