மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக் கடன் முகாம் 29.08.2024 அன்று நடைபெற உள்ளது
Sholavandan King 24x7 |28 Aug 2024 12:47 AM GMT
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல்
மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக் கடன் முகாம் வருகிற 29.08.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கு முறையே தேசிய தகுதித்திறன் மற்றும் நுழைவுத்தேர்வு பொறியியல் கலந்தாய்வு, இதர நுழைவுத்தேர்வு மற்றும் நேரடியாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. மேலும் அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4,50,000/-க்குள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாங்கிய கல்விக்கடனில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரையிலான கடன் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்குரிய வட்டி படிக்கும் காலங்களுக்கு முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு www.vidvalakshmi.co.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ/மாணவியர் விண்ணப்பிக்கலாம். மேற்படி முகாமிற்கு தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை கல்வி தகுதி 10/12-ம் வகுப்பு சான்றிதழ் ஒற்றைச் சாளரமுறை வழிச் சான்று (Counselling Letter) மாற்று சான்றிதழ் (Transfer Certificate) கல்லூரி அட்மிஷன் கடிதம் கட்டண விபரம் கல்லுாரியின் Approval/Affiliation சான்று பான் கார்டு சாதிச் சான்றிதழ் பெற்றோர் ஆண்டு வருமானச் சான்று முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழிச் சான்று கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி புத்தகம் மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
Next Story