திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் 29.12.2024-அன்று தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்
Virudhunagar King 24x7 |23 Dec 2024 3:35 PM GMT
திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் 29.12.2024-அன்று தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மாரனேரி இன்னோவெல் இன்ஜினிரிங் இண்டர்நேசனல் லிமிடெட்.(Innowell Engineering International Pvt. Ld) இணைந்து நடத்தும், திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில், தனியார் நிறுவனங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.12.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 88836-50560 என்ற தொடர்பு கொள்ளலாம். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கீழ்கண்ட QR Code-னை ஸ்கேன் செய்து விபரங்களை பதிவேற்றி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story