தஞ்சை மாவட்டத்தில், 293 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு
Thanjavur King 24x7 |22 Jan 2025 10:03 AM GMT
அரசு செய்திகள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய வசதியாக 293 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை தஞ்சாவூர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 04362-23582/236088 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவித்திடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story